யாழ் மாநகர சபை -நல்லூர் உற்சவ கவிதை 1995
கவிதை தலைப்பு :நல்லூரின் வீதியிலே கவிதை எழுதிய திகதி :21 08.1995 நல்லூரின் வீதியிலே நடந்தவைதான் எத்தனையோ பல்லூரின் மக்கள் இங்கு பழி கிடந்த கதை அறியோ கொல்லூர்த்தி கணைகள் இங்கு கூவி வரும் வேளையிலும் நல்லூரின் வாசலிலே நம் கிடந்த நாள் இல்லையோ ? ஈகத்தின் கோவில் அவன் இமை போலும் திலீபன் அவன் பாகத்தை பிரித்த்க் கொடு பாவிநீ வெளியேறு என சாகக் கிடந்த நாட்கள் அதை தமிழர் நாம் மறப்போமா 6சோகத்தின் எல்லை அது சோதனையின் காலம்அது ! ஆமி அவன் வெளிக்கிட்டு ஆக்கினைகள் செய்கையிலே சாமி நீ கதி என்று சரண் புகுந்த இடம் எதுவோ? பூமியதிர் குண்டுகளால் புதுமனைகள் உடைகையிலும் காமி ஓர் இடம் என்று காத்து விட்ட கால் எதுவோ கும்பிடும் வேளையிலும் குளிர் களி தனை எண்ணி வெம்பிடும் தம்பியரை வேறு இடம் காட்டி வந்து கம்பி நீட்டி சென்றிடுக காசுதனை காப்பாத்த நம்பி அந்த நாள் எல்லாம் நல்லூரின் வீதியிலே புரண்டு செய்த புரதட்டை எத்தனை புழுதி அளைந்த புளுகங்கள் எத்தனை திரண்டு இழுத்த தேர் வடம் எத்தனை திரிந்து மகிழ்ந்த்தெருக...